"தமிழர்களின் பிறப்புவீதம் அதிகரிக்க வேண்டியது கடமை - 5 பிள்ளைகள் பெறுங்கள்"
அபிவிருத்தி என்பது மக்கள் தொகையிலும் தங்கியுள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் தேவை என்பதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் ஐந்து பிள்ளைகள் ஆனந்தமான குடும்பம் என்பதை ஒவ்வொருவரும் தாரக மந்திரமாக கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறினார்.
கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்விவலய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டும் விழாவில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் உரையாற்றிய அரியநேத்திரன்,
இனத்தையும் மொழியையும் நிலத்தையும் கலாசார விழுமியங்களையும் நாம் பாதுகாக்க வேண்டுமானால் இனத்தின் பிறப்புவீதம் அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டு பிள்ளைகள் போதும் என்ற சிந்தனையைவிட்டு ஐந்து பிள்ளைகள் ஆனந்தமான குடும்பம் என்பதை எல்லோரும் உணர்ந்து அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பாடசாலைகளிலும் மாணவர் தொகை குறைந்து செல்லுமானால் எதிர்காலத்தில் பல தமிழ் பாடசாலைகள் மூடவேண்டிய நிலை ஏற்படும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் கடந்த வருட முதலாம் வகுப்பில் சேர்ந்தவர்களைவிட இந்த ஆண்டு ஐந்துவீதத்தால் குறைந்துள்ளது மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ்மாணவர்களின் தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. நிலத்தின் பாதுகாப்பு என்பது மக்கள் குடியேற்றத்திலும் தங்கியுள்ளது. குறிப்பாக எல்லைக் கிராமங்களை பாதுகாக்க அங்கு சென்று வாழ்வதற்கு தமிழ்மக்கள் தயாராக வருவதற்கு மறுக்கின்றனர். ஆனால் வேறு இன மக்கள் குடியேறும்போது அதை தடுக்குமாறு கூறுகின்றனர். திட்டமிட்ட குடியேற்றங்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்தும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய்து வருகின்றோம். காணி அபகரிப்புக்களை நிறுத்த நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதேவேளை தமிழர்களின் பிறப்புவீதம் அதிகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தார்மீகக்கடமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நான் இந்த விடயத்தை கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் வலியுறுத்தி வருகின்றேன்.
அப்போது இதை நான் பேசியபோது பலர் என்னை நகைச்சுவையாகவும் வேண்டா வெறுப்பாகவும் விமர்சனம் செய்தனர். ஆனால் அன்று என்னை பிழையான கருத்து என கூறியவர்கள் இன்று எனது கருத்து சரியானதே என்பதை கூறுவதுடன் அவர்களும் எனது கருத்தை உணர்ந்து மக்கள் மத்தியில் இந்த விடயத்தை எடுத்து கூறிவருவதை காணமுடிகிறது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள், சமய பெரியார்கள், அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள்,பொது அமைப்பு பிரதிநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், அனைவரும் அவர்களால் நடத்தப்படும் நிகழ்வுகள், கூட்டங்கள், செயலமர்வுகள் சந்திப்புக்கள் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் ஐந்து குழந்தைகள் ஆனந்தமான குடும்பம் என்ற கருத்தை ஆதாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
இதற்கான ஊக்குவிப்புக்களுக்காக எமது புலம் பெயர் சமூகமும் உதவ முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறுவோமானால் இன்னும் பத்து வருடங்களில் நாம் பலதை இழக்க வேண்டிய பாரதூரமான பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். இன்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது கடந்த ஆண்டுகளைவிட சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது. எதிர்வரும் வருடங்களில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மட்டுமன்றி க.பொ.த. சாதாரண / உயர்தரப் பரீட்சையிலும் மாணவர்கள் பல சாதனைகள் படைப்பார்கள் என்பது தெளிவு. மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடமை புரிவதை நான் தொடர்ந்தும் பாராட்டிவருவதை இன்று ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்களின் கல்வி, பெற்றோர்களின் அக்கறையிலும் தங்கியுள்ளது பெற்றோர், மாணவர்கள் ஒழுக்க விழுமியங்களுடன் கல்வி கற்க உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அரியநேத்திரன் மேலும் கூறினார்.
வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள் அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என 1437 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிவிட்டான் படைத்த இறைவனுக்கு தெரியும் யாரை எந்த விகிதாசாரத்தில் வைத்தால் என்ன நன்மைகள் இந்த உலகில் ஏற்படும் என்பது
ReplyDeleteEnathu.thaimoli.tamil.pesuna.avan.ellarum.tamilanda
ReplyDeleteஞானசார 5 புள்ள பெற்று முடிந்து இப்பொழுது இவர் ,
ReplyDeleteJanatherar.thirmpa.varuvan
ReplyDelete