Header Ads



வடக்கிலிருந்து 500 கிலோ தங்கம் மீட்கப்பட்டது, பெருமளவை ராஜபக்ஷ குடும்பம் சுருட்டியது

இறுதிக்கட்ட யுத்தத்தில் வடக்கில் 400 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டிருந்தது. அதில் பெருமளவு தங்கம் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதென முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற நிதிச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்;

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வடக்கிலிருந்து 137 கிலோ தங்கமே  மீட்கப்பட்டதாக தனக்கு தகவல்  தரப்பட்டுள்ளதென பிரதமர் நேற்று (புதன்கிழமை) இச்சபையில் குறிப்பிட்டார். அத்தகவல் தவறு. அப்போது நான்தான் இராணுவத் தளபதியாக இருந்தேன்.

நான் மட்டும் மீட்டுக் கொடுத்த தங்கம் 220 கிலோ. அதில் ஒவ்வொரு நகையிலும் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அது தொடர்பில் ஊடகங்களுக்கு பசில் ராஜபக்ஷ கூறுகையில் 110 கிலோ தங்கமே மீட்கப்பட்டதாகக் கூறினார்.  அரைவாசித் தங்கத்தை அப்போதே மகிந்த குடும்பம் கொள்ளையடித்துவிட்டது.

நான் 220 கிலோ தங்கத்தை மீட்டுக் கொடுத்த நிலையில் அதன் பின்னரும் தங்கம் வடக்கில் மீட்கப்பட்டது. இவ்வாறு 400 முதல் 500 கிலோ வரையான தங்கம் மீட்கப்பட்டது. ஆனால்  தற்போது 137 கிலோ கணக்கு காட்டப்பட்டுள்ளது. மிகுதி தங்கம் மகிந்த குடும்பமே கொள்ளையடித்தது என்றார்.

2 comments:

  1. நீயும் கள்ளன் முன்னால் கள்ளன தான்.

    ReplyDelete
  2. faris நீயும் கள்ளன் என்று இவரை சொல்வது இந்த விடயத்தில் பொருத்தமற்றது காரணம் அன்று இவ்வாறான உண்மைகளை யாராலும் வெளியிட முடியாத நிலைமை நாட்டில் இருந்தது அதற்க்கான காலம் இப்போது கனிந்துள்ளது.கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் ஜெயிலுக்கு போனவர்களில் இவர் முதன்மையானவர் என்பது நாமறிந்த உண்மை.(அதற்காக இவர் எல்லா விடயத்திலும் நல்லவர் என்று சொல்லவில்லை)

    ReplyDelete

Powered by Blogger.