தெஹிவளையில் மீட்கப்பட்ட 4 ஜனாஸாக்கள் - இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை
தெஹிவளை, கவுடான வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை, அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேற்படி வீட்டிலிருந்து, நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் களுபோவில வைத்தியசாலையில், நேற்றைய -16- தினமே மேற்கொள்ளப்பட்டன.
இச்சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, அவற்றை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment