Header Ads



40.000 க்கு குறைவான சம்பளம், பெறுபவர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

இலங்கையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளம் பெறும் தனியார் ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கேற்ப தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் கடந்த பத்து வருடங்களாக அதிகரிக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், 2005ஆம் ஆண்டுதான் இறுதியாக தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது எனவும் கூறினார்.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வை கொடுக்க தனியார் நிறுவனங்கள் தவறினால் அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்தார்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை கொடுக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் தண்டப் பணம் விதிக்க முடியுமென்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.