Header Ads



இலங்கையில் வருடமொன்றுக்கு 4 இலட்சம் பெண்கள் கர்ப்பம், 15,000 கருக்கலைப்பு

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார்.

தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிப்பதாகவும் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து விடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் சிறுவயது கர்ப்பிணிகள் 24,000 பேர் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.