கடலில் தத்தளிக்கும் மனித உயிர்கள் - 4 நாட்களில் 1500 பேர் மீட்பு
இத்தாலி மற்றும் லிபியா கடற்பகுதிகளில் உயிருக்கு போராடிய 1500 குடியேறிகளை அந்நாடுகளின் கடற்படையினர் மீட்டனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக ஈராக், சிரியா, போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
வருபவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான முறையில் தகுந்த பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் கடற்பயணம் செய்வதால் மரணமடைகின்றனர்.
எனினும் இவர்களது பயணம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று சிசிலி(Sicily) ஜலசந்தியில் தவித்துகொண்டிருந்த 900க்கும் மேற்பட்ட குடியேறிகள் மீட்கப்பட்டனர்.
இதேபோல் லிபியாவின் கடற்பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு படகு மூழ்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது 4 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று ரோந்து படையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment