Header Ads



3 மாதக் குழந்தையை, சுவற்றில் அடித்துக்கொன்ற தாய்

கிளிநொச்சி, திருநகர் பகுதியில் தனது 3 மாதக் குழந்தையை தாயொருவர் சுவற்றில் அடித்துக் கொலை செய்த சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி பிறந்த நரேஸ்குமார் மதுசாளினி என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தமையால், அழுகையை நிறுத்த முடியாது கோபத்தில் தாய் சுவற்றில் குழந்தையை அடித்துள்ளார். அடித்ததில் குழந்தை உடனேயே உயிரிழந்தது. 

அங்கு சென்ற பொலிஸார், குழந்தையில் சடலத்தை மீட்டு, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மயங்கிக் கிடந்த தாயையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கிளிநொச்சியிலுள்ள திணைக்களம் ஒன்றில் பணியாற்றி வரும் மேற்படி பெண்ணுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்து, அவர் மனரீதியில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் குழந்தை அவருக்கு பிறந்திருந்தது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.