Header Ads



37 ஏக்கர் முஸ்லிம் மைய­வாடி, 5 ஏக்கரானதன் சோக வரலாறு

-ARA.Fareel விடிவெள்ளி-

'மாளி­கா­வத்தை' என்றால் எம்மில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு முஸ்லிம் மைய­வாடி தான் நினை­வுக்கு வரும். அது மாளி­கா­வத்­தையில் போக்­கு­வ­ரத்­துக்கு வச­தி­யான இடத்தில் அமைந்­தி­ருக்­கி­றது.  அன்று 1874 ஆம் ஆண்டு 37 ஏக்கர் 3 ரூட்  13 பர்ச்சஸ் பரப்­ப­ள­வினைக் கொண்­டி­ருந்த மாளி­கா­வத்தை மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணி இன்று வெறும் 5 ஏக்கர் 2 ரூட் 3.75 பர்ச்­ச­ஸாக குறுகி நிற்கிறது.

மைய­வாடி காணி­யையும் ஆக்­கி­ர­மித்துக் கொண்டு எட்டு மாடி­யையும் தாண்டி இன்று ஒரு கட்­டிடம் கம்­பீ­ர­மாக எழுந்து நிற்கிறது. மைய­வா­டியின் பழைய மதில் உடைக்­கப்­பட்டு மைய­வா­டியின் 20 அடி அக­ல­மான பகுதி உள்­வாங்­கப்­பட்டு புதிய மதி­லொன்று குறித்த நிறு­வ­னத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்குச் சொந்­தக்­காரர்தான் உபாலி ஜய­சிங்க என்­ப­வ­ராவார். 

இன்று கெத்­தா­ராம பன்­சலை வீதி மற்றும் போதி­ராஜ மாவத்தை வரையில் 1874 ஆம் ஆண்டு முஸ்லிம் மைய­வா­டிக்­காக அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 37 ஏக்கர் 3 ரூட் 13 பர்ச் காணி அமைந்­துள்­ளது. இதில் பல வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், கடைகள், மஸ்­ஜிதுல் முனவ்­வரா பள்­ளி­வாசல் உட்­பட பல சொத்­துக்கள் இந்த மைய­வாடிக் காணி­யிலே அமைந்­துள்­ளன. 

இந்நிலையில் மைய­வாடிக் காணி­யையும் ஆக்­கி­ர­மித்து தற்போது நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் கட்­டிட நிர்­மா­ணத்­துக்­காக மையவாடியின் நிலம் பெகோ இயந்­தி­ரத்­தினால் அக­ழப்­பட்ட போது ஜனா­ஸாக்­களின் எச்­சங்கள் (எலும்­புகள்) வெளி­யி­லெ­டுக்­கப்­பட்­டன என்­பதை நாம் அறிந்து கொள்­ளும்­போது எமது உணர்­வுகள் மேலி­டு­கின்­றன அல்­லவா?

இந் நிலையில் மைய­வாடிக் காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் சமூக ஆர்­வலர் சட்­டத்­த­ரணி ருஸ்­தி­ ஹபீப் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்ளார். 

மாளி­கா­வத்தை மையவாடிக்கு சொந்­த­மான காணி 1874 ஆம் ஆண்டு கைலெப்பே சின்­ன­லெப்பே என்­ப­வரால் உசேன் லெப்பே அப்துல் கண்டு மரிக்கார் என்­ப­வ­ருக்கு அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­டது. இக் காணி கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட போது அன்­ப­ளிப்புச் செய்­தவர் ஆரம்ப நிர்­வா­கி­யாக இருந்தார்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலே தற்­போது மாளி­கா­வத்தை மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணியை நிர்­வ­கித்து வரு­கி­றது.  வக்பு சொத்­துக்­களை முறை­யாகப் பரி­பா­லிக்க வேண்­டிய எம்­ம­வர்­களின் அச­மந்தப் போக்­கினாலேயே இவ்வாறு காணிகள் கைவிட்டுப் போயுள்ளன.  மைய­வா­டிக்­காணி கடந்த காலங்­களில் பலரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் காலத்தில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மையே இதற்குக் கார­ண­மாகும். காலா­காலம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான கட்­டி­டங்கள் வாட­கைக்கு விடப்­பட்டு பின்பு கைமா­றிப்­போ­யுள்­ளது.

கெத்­தா­ராம விளை­யாட்டு மைதான அபி­வி­ருத்­திக்கும் மைய­வாடிக் காணியின் ஒரு பகுதி பெறப்­பட்­ட­மையை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். இக்­கா­ணியில் அமைந்­துள்ள கட்­டி­டங்­க­ளுக்கு பல தசாப்த கால­மாக வாட­கை­யாக ஒரு சிறு தொகையே தொடர்ந்து வழங்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. மாத வாடகை இன்று கூட 100, 200 ரூபா என்று தான் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது என்­பதை அறிந்து கொள்­ளும்­போது வியப்­பாக இருக்­கி­ற­தல்­லவா?

மாதம் 3 இலட்சம் ரூபா வாட­கை­யாக பெற்றுக் கொள்ளக் கூடிய பெரிய கட்­டி­ட­மொன்­றுக்கு ஒரு நிறு­வனம் மாதம் வெறும் 3500 ரூபாவே வாட­கை­யாக செலுத்தி வரு­கின்­றது என்ற தகவல் உண்­மை­யிலே எம்மை வியப்­புக்குள் ஆழ்த்­து­கி­ற­தல்­லவா?

உபாலி ஜய­சிங்க என்­ப­வரால் 2003 ஆம் ஆண்டில் மைய­வா­டி­யையும் அவ­ரது காணி­யையும் வேறு­ப­டுத்தும் வகையில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த மதில் உடைக்­கப்­பட்­டது. இதனை மாளி­கா­வத்தை பகுதி மக்கள் தடுக்க முற்­பட்­டனர். பொலி­ஸிலும் முறை­ப்பாடு செய்­யப்­பட்­டது. இக்­கா­லத்தில் கொழும்பு மேயராக பிர­சன்ன குண­வர்த்­தன பதவி வகித்தார். 

உபாலி ஜய­சிங்க கைப்­பற்­றி­யி­ருந்த காணிக்கு உரிமை கோரி 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தது. அந்த வழக்கு பின்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னாலேயே வாபஸ் பெறப்­பட்­டது. நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய பிர­தி­வா­திக்கு வழக்குச் செல­வாக 25 ஆயிரம் ரூபாவும் வழங்­கப்­பட்­டது.

2006 ஆம் ஆண்­டிலும் உபாலி ஜய­சிங்க மைய­வாடிக் காணியை அப­க­ரித்­துள்­ளமை தொடர்பில் நடவ­டிக்கை எடுக்­கும்­படி பொது மக்­களால் மாளி­கா­வத்தை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. பொலிஸார் மாளி­கா­கந்த நீதவான் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தார்கள். மைய­வாடிக் காணி தங்­க­ளது காணி என நிரூ­பிக்­கும்­படி நீதிவான் வழக்குத் தொடு­நர்­க­ளிடம் வேண்­டினார்.  மைய­வா­டிக்­கா­ணியின் உரி­மையை நீதி­வா­னிடம் நிரூ­பிப்­ப­தற்கு அப்­போ­தி­ருந்த பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் அக்­கறை கொள்­ள­வில்லை. அதனால் நீதி­மன்றம் வழக்­கினைத் தள்­ளு­படி செய்­தது.

இவ்­வா­றான நிலையில் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபை உபாலி ஜய­சிங்­க­வுக்கு 8 மாடி கட்­ட­டத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யது. (அப்போது மாநகர சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த விஷேட ஆளுநரின் கீழ் இயங்கியது) ஆனால் இந்த அனு­மதி சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். ஏனென்றால் பிர­க­டன காணி உறு­தி­யுள்ள ஒரு காணியில் கட்­டடம் நிர்­மா­ணிப்­ப­தற்கு அனு­மதி வழங்க முடி­யாது. இக்­கா­லத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராக கோதா­பாய ராஜபக் ஷவே இருந்தார். இவரே நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலை­வ­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.

இவரின் சிபார்­சி­னா­லேயே கொழும்பு மாந­கர சபை இந்த கட்­டட நிர்­மா­ணத்­துக்­கான அனு­ம­தியை வழங்­கி­யது. இதற்கு எதி­ராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மார்க்க உரி­மை­க­ளுக்­கான அமைப்பு (SLMRRO) மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ரிட் விண்­ணப்­ப­மொன்­றினைத் தாக்கல் செய்­தது. அந்த விண்­ணப்­பத்தில் கட்­டட நிர்­மாணப் பணிக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்தைப் புதுப்­பிக்க வேண்டாம் எனக் கேட்­டது. இந்த வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் நீதி­மன்றம் செல்­லா­ததால் வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

2013 ஆம் ஆண்டும் உபாலி ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. கொழும்பு பெரி­ய­பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியில் உபாலி ஜய­சிங்க அத்துமீறிப் பிர­வே­சித்­தி­ருக்­கிறார் எனவும் அவ­ரது அத்­து­மீ­றலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்­டு­மெனக் கோரியே இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனினும் இந்த வழக்கும் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் வழக்கு தள்­ளு­படி செய்­த­தற்கு எதி­ராக சிவில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. சிவில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இவ்­வ­ழக்கை மாவட்ட நீதி­மன்றம் தள்­ளு­படி செய்­தது தவறு என தீர்ப்பு வழங்­கி­யது. இந்த வழக்கு தற்­போது நிலு­வையில் இருக்­கி­றது. 

கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் வழக்கு

தற்­போது உபா­லி­ ஜ­ய­சிங்­கவின் சட்டவிரோத கட்­டட நிர்­மாணப் பணி­க­ளுக்கு எதி­ராக கொழும்பு மாந­கர சபை, கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­துள்­ளது.  கொழும்பு மாந­கர சபையின் நகர பொறி­யி­ய­லாளர் திணைக்­கள (திட்­ட­மிடல்) த்தைச் சேர்ந்த சரத் லசந்த விதா­னகே என்­பவர் இந்த வழக்­கினைத் தாக்கல் செய்­துள்ளார்.

கொழும்பு மாந­கர சபை கட்­டட நிர்­மாணப் பணிக்­கான அனு­ம­தியை நிறுத்­தி­யுள்ள நிலையில் தொடர்ந்தும் நிர்­மா­ணப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை நிறுத்தும் படியும் கட்­ட­டத்தை உடைக்க உத்­த­ர­வி­டு­மாறும் கோரி இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் 28 ஏ (3)ஆம் பிரிவின் கீழ் இவ்­வ­ழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. 

2 comments:

  1. This need to be dealt lt by Muslim MP in the parliament. I will say non of Muslim MP wan't talk a single word in the parliament. They say we represent Muslim but they fear to talk about unjust . we can see who is the brave Muslim MP raise this in the parliament and take nassasary legal action? At least Asard saly was able to talk about this rink but some one polot. Him not to contest in kandy because of votes. If he contested he could have beat other Muslim contester's. This is my opinion.and I am not fan of any politician rather I would like to raise the reality.

    ReplyDelete
  2. இது காணியை அபகரிதவர்களின் பிரச்சினை அல்ல இதற்கான முழு பொறுப்பும் அந்த நிர்வாக சபையே சாரும் அவர்களும் அவர்களின் பைகளை நிரப்பி கொண்டால் எங்கனம் சட்டம் செல்வது

    முதலில் அந்த நிர்வாக சபைக்கு கல் erinthu கொல்ல வேண்டும் pinnar தான் valaku விசாரணைக்கு போக வேண்டும்

    நம்மவர்களை திருத்தாமல் மத்தவர்களை திருத்தவோ தண்டிக்கவோ முடியாது

    ReplyDelete

Powered by Blogger.