புதிய அரசியலமைப்புத் தொடர்பில் 3000 மக்கள் கருத்துக்கள்
நாடளாவிய ரீதியில் மக்களிடம் இருந்து சுமார் 3000 யோசனைகள் மற்றும் கருத்துக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை இவற்றில் 2500 வரையானவை வாய்மொழி மூல யோசனைகள் மற்றும் கருத்துக்கள் என, அக் குழுவின் தலைவர் லால் விஷேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
எனினும், கொழும்பு மாவட்டத்தில் அதிக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 3ம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில், இம் மாவட்டத்தில் மீண்டும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லால் விஷேநாயக்க கூறியுள்ளார்.
Post a Comment