மைத்திரியை விலகுமாறு தீர்மானம் நிறைவேற்றம் - 2 வருடங்களில் ஆட்சியை கவிழ்க்க சபதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகி, கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்க வேண்டும் என்று யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பெலவில் உள்ள வீட்டில் இன்று நடைபெற்ற மினுவங்கொட தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரன்ன ரணதுங்கவை மீண்டும் மினுவங்கொட தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கும் வரை கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட போவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மினுவங்கொட தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார சபை மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள் அனைத்தும் கூட்டு எதிர்க்கட்சி சார்ந்த அமைப்புகளாக செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கு உரையாற்றிய பிரசன்ன ரணதுங்க,
சிறைகளில் அடைத்தாலும் பதவிகளை பறித்தாலும் வீதியில் இறங்கி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம்.
எமது ஆட்சியில் பாதாள உலக குழுக்களை ஒடுக்கினோம். ஹெரோயின் போதைப் பொருள்களை பிடித்தோம். அந்த காலத்தில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அன்று ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஹெரோயின் இன்று 600 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கேரள கஞ்சா நாடு முழுவதும் வியாபித்துள்ளது.
நாடு தற்போது ஹெரோயின் புரியாகவும் பாதாள உலகபுரியாகவும் மாறியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சிக்கு மாத்திரமே இந்த நிலைமையை மாற்ற முடியும் என்றார்.

Post a Comment