Header Ads



துருக்கியில் போலீஸார் மீது தாக்குதல் நிகழ்த்திய, 2 பெண்கள் சுட்டுக் கொலை



துருக்கியில் காவல் நிலையத்தைக் குறி வைத்து தாக்குதல் நிகழ்த்திய இரு பெண்கள் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

 தலைநகர் இஸ்தான்புலில் காவல் நிலையத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நோக்கி இரு பெண்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

 மேலும், போலீஸாரை நோக்கி கையெறி குண்டுகளை அவர்கள் வீசினர். எனினும் அந்த குண்டு வெடிக்கவில்லை.

 தாக்குதல் நிகழ்த்திவிட்டு அருகிலுள்ள கட்டடத்தில் அந்தப் பெண்கள் பதுங்கினர்.

 இதையடுத்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்த போலீஸார், இரு பெண்களையும் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் இரு போலீஸார் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

No comments

Powered by Blogger.