ஜம்இய்யத்துல் உலமா முன்வைக்கும் 2 முக்கிய யோசனைகள்
-ARA.Fareel-
ஜம்இய்யத்துல் உலமாசபை பிரதிநிதிகள் நேற்று (24) அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான மக்கள் கருத்தறியும் குழுவை விசும்பாயவில் சந்தித்து கலந்துரையாடியது.
புதிய அரசியலமைப்புக்கான உலமாசபை தயாரித்துவரும் ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது தொர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் நடைபெற்ற கலந்துரையாடல் பற்றி விபரிக்கையில்,
ஐ.எஸ்.அமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஐ.எஸ். அமைப்பினை உலமா சபை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வருவதாகவும் இது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணான அமைப்பு என்று கூறினோம்.
இலங்கை முஸ்லிம்களின் தாய்நாடு முஸ்லிம்கள் சகல இனத்தவருடனும் நல்லிணக்கத்துடனே வாழ விரும்புபவர்கள் பிரிவினை வாதத்தை எதிர்ப்பவர்கள். நாடு துண்டாடப்படுவதை ஒரு போதும் விரும்பாதவர்கள் என்று எடுத்துரைத்தோம்.
முஸ்லிம் மாணவிகளுக்கு கலாசாரத்தை பேணும் வகையிலான சீருடையொன்று உறுதிசெய்யப்பட வேண்டும் இது அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
அனைத்து சமூகங்களுக்கும் சம அந்தஸ்தும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம் என்ற பெயரில் இயங்கும் இஸ்லாத்துக்கு விரோதமான இயக்கங்களை நிராகரிக்கிறோம்.
உலமா சபை நாட்டில் நல்லிணக்கம், சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, சகோதரத்துவம் உருவாகும் வகையிலான அரசியலமைப்பையே எதிர்பார்க்கிறது என்றும் தெரிவித்தோம் என்றார்.
கலந்துரையாடலில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்கள் யோசனைக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்படவுள்ள தமது ஆலோசனைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஷ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் உட்பட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The election department will not allow one person to contest two times in an election.Ex; it must be Presidential election rule. One MP can ask only two times in general election. After that, he CA not contest in third time.
ReplyDeleteIt is very happy to see the second point highlighted in red
ReplyDeletethis can be simplified as
ReplyDelete1. Any citizen of Sri Lanka have right to chose his/her religion and practice.