கொழும்பில் ஹக்கீமுக்கு எதிராக சதித்திட்டம் - 2 மௌலவிகள் பிடிபட்டனர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கும் கடிதம், 19-03-2016 பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
மு.காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சதித் திட்ட நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டிலிலேயே இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சதித் திட்டமொன்று கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இதில் மேற்குறிப்பிட்ட இருவரும் கலந்து கொண்டமைக்கான ஆதாரம், கட்சித் தலைவருக்குக் கிடைக்கப் பெற்றமையினை அடுத்து, இவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்; முஸ்லிம் காங்கிரசிலிருந்து இருவரை நேற்றிரவு இடைநிறுத்தியுள்ளதாகக் கூறினார்.
ஆயினும், இடைநிறுத்தப்பட்ட நபர்களின் பெயர்களை ஹக்கீம் மேடையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் ஆகியோரைத்தான் இடைநிறுத்தியுள்ளதாக, சில ஊடகங்கள் அனுமானத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் தலைமை பதவியில் ஒருவர் நீண்ட காலமாக
ReplyDeleteஅமர்ந்து கொள்ளும்போது அவருக்கெதிராக `அதன் உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு ஜனநாயக வழிமுறையாகும் .ஆனால் அவர்களுக்கு தலைமை தண்டனை வழங்குவது என்பது ஒரு சர்வாதிகார வழிமுறையாகும் .
Hakeem is a selfish leader , holding his post in iron grip for Ministry and other previleges not for society.
ReplyDeleteஅப்படியானால் பசீர் சேகுதாவுதுக்கு எத்தனை தடவைகள் கொடுக்கப்பட வேண்டும்
ReplyDeleteSLMC became a reality due to political needs as the national political parties such as SLFP and UNP never raised their voice in support of the issues related to Muslim community.therefore the rise of SLMC and politicl leadership to muslim community was inevitable. But after the demise of Hon.Ashraff created a void and Mr.Hakeem's Nafs desired for the leadership and those who were responsible for him to become the leader(Dealer) such as Athaullah and Basheer became victims. If they had acted sensibly at that time SLMC would have been governed by a presidium which would have been ideal for a Minority Party like SLMC. Hassan Ali was one of the pioneer of SLMC and it is not that easy for Hakeem to remove or clip his powers mandated to him by the Party National Convention. Eastern Muslims have fully understood the way in which the leader is trying to adopt and carry out his personal Opinions as the party decisions and act as a dictator. your money cannot always win elections for you, if not for the hundreds of millions you spent during the last parliamentary election in ampara district the true picture of your leadership would have been exposed. I pity for the party which was formed due to necessity being ruined by the misguiding leadership. Restore the status of the Secretary General to prevent further damage to the party.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete