Header Ads



2 கோடி கேட்டு வழக்கு

கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்பானிய மொழி பாடகர், என்றிக் இக்லீசியஸின் இசை நிகழ்ச்சியை நடாத்திய Live Event நிறுவனத்திடம் ரூபா 2 கோடி 20 இலட்சம் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.

கொழும்பு, மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால், இன்றைய தினம் (02) குறித்த நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் இணை பணிப்பாளர்களாக சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் காணப்படுவதோடு, குறித்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த, வழக்கறிஞர் ஹிஷான் பெரேரா மற்றும் அவரது மனைவி ஆகியோரது 'லைவ் இவன்ட்' நிறுவனத்திற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக ரூபா 35 ஆயிரம் VIP நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்தோரினாலேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நுழைவுச்சீட்டுக்கு வழங்குவதாக தெரிவித்த எந்தவொரு வசதியையும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், குறித்த நிகழ்வின்போது ஒரு சில அசிங்கமான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இதனால் தாங்கள் கடுமையான மன உழைச்சலுக்குட்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.