Header Ads



மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை - 2 வேறுபட்ட கருத்துக்கள்

ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தமாக மத்திய செயற்குழுவை தெளிவுபடுத்துவதாக அந்தக் கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். 

மத்திய செயற்குழுவில் இது சம்பந்தமாக கலந்துரையாடி சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார். 

ஜனநாயக விரோதமாக கட்சியின் தலைவரோ அல்லது கட்சியின் செயலாளரோ தனிப்பட்ட முறையில் தீர்மானங்கள் எடுப்பதில்லை என்று துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். 

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2

கடந்த தினம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். 

அந்தக் கூட்டத்தில், அவர்களில் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியையோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ விமர்சிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.