மைத்திரிக்கு 27 ஆண்டுகள் பூர்த்தி
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இன்றுடன் 27 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
1989 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மைத்ரிபால சிறிசேன, 1989 மார்ச் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
1994ஆம் ஆண்டு திரு.மைத்ரிபால சிறிசேன அவர்கள் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சர் அந்தஸ்த்துள்ள மகாவலி அபிவிருத்தி அமைச்சராக 1997ல் தெரிவு செய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2004ஆம் ஆண்டு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
2005ஆம் ஆண்டு விவசாய, சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டு விவசாய, நீர்ப்பாசன, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சராகவும் 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்தின்போது விவசாய அபிவிருத்தி மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கு மேலதிகமாக திரு.மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக 09 சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளதுடன் 2009ஆம் ஆண்டு எல்ரீரீஈ. இயக்கத்தை யுத்த ரீதியில் தோல்வியடையச் செய்த இறுதிக் கட்டத்திலும் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
2010ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக தெரிவு செய்யப்பட்டதுடன் 2015 ஜனவரி மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.03.09
Post a Comment