Header Ads



2600 மில்லியன் செலவில், இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா


இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்காவான அம்பாந்தோட்டை, ரிதியகம சபாரி பூங்க நாளைய -28- தினம் திறந்து வைக்கப்படவிருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் 2008 ஆம் ஆண்டு நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவுக்கும் செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

500 ஏக்கரில் அமைந்துள்ள, இந்த சபாரி பூங்காவில், சிங்க வலயம், உலக விலங்கின வலயம், ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்கள் உள்ளன.

சபாரி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதுடன் நாளைய தினம் முதல் அவற்றை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.