20 உலகக் கிண்ண போட்டித் தொடர் - ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் விசாரணை
ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சர்வதேச கிரிக்கட் அணி ஒன்று மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அணி தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
டுவன்ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சிக்கப்படுவது தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவு தலைவர் சேர் ரோனி பிளான்கன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் அணியொன்றின் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதனால் இதனை விடவும் மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment