Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், பொது பலசேனா உள்ளிட்ட 20 கட்சிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்


இலங்கையில் இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் செயற்படும் கட்சிகள் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. 

இதன்படி இந்த மனு எதிர்வரும் ஜூன் 6ம் திகதியன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுபலசேனா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, நவ சிஹல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவ்வாறான 20கட்சிகள் தமது பெயர்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்

No comments

Powered by Blogger.