Header Ads



"2009 உலகக் கோப்பையின்போதுகூட, அணியில் இருந்தவர்களில் 6 பேர் பேசிக்கொள்ளவில்லை"

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நியூஸிலாந்து. இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பெற்ற நியூஸிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் 2-வது தோல்வியை சந்தித்த பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இழந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கு கோஷ்டி பூசல் காரணமாக என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தவுள்ளது. உலகக் கோப்பை போட்டி முடிந்து பாகிஸ்தான் அணி நாடு திரும்பியதும் இந்த விசாரணை தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சோயிப் மாலிக் கூறும்போது:-

அணியில் ஒற்றுமையின்மை நிலவுகிறது என குற்றம் சாட்டுவது ஆதாரமற்றது. அணி தோற்கும்போதெல்லாம் இந்தப் புகார் எழுகிறது. இதனாலேயே எங்களால் ஓர் அணியைக் கட்டமைக்க முடியவில்லை. அணி தோற்கும்போது அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வீரர்கள் மாற்றப்படுகிறார்கள்.

2009 உலகக் கோப்பையின்போது கூட அணியில் இருந்தவர்களில் 6 பேர் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அப்போதும் நாங்கள் கோப்பையை வென்றோம். இந்த அணியில் திறமை உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதில்லை. அதுதான் பிரச்சினை என்றார். 

No comments

Powered by Blogger.