முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய, மாநாட்டு தயார்படுத்தல்கள்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு, தேசிய மாநாடு சிறப்பாக இடம்பெறுவதை ஒழுங்கமைக்கும் நோக்கில், தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், கட்சியின் இளைஞர் படையணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் ஆலோசனைக் கூட்டம் இன்று -12- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பதில் சுகாதார அமைச்சர் பைஸல் காசிம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், மாகாணசபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இக் கூட்டம் முடிவடைந்ததுடன் இளைஞர் தொண்டர் அணியினருக்கும் கட்சியின் பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்குமிடையில் சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றும் நடைபெற்றது.
We need to celebrate our over 1400 years histry not just 19 years.
ReplyDelete