அரசுக்கு எதிராக விமல் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள் - 17 ஆம் திகதி அணிதிரள அழைப்பு
அரசாங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காட்ட முயற்சிக்கும் கோமாளித்தனத்திற்கு எதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில் கூடுமாறு நாட்டை நேசிக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் சீர்குலைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டி நாளைய தினம் பேரணி ஒன்றை நடத்தப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்ததுடன் ஹைட் பார்க்கில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பொரல்லை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ஸ இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில்,
அன்னப்பறவை சின்னம், யானைச் சின்னம் ஆகியவற்றுக்கு தமது வாக்குகளை வழங்கிய நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தற்போதைய அரசாங்கம் தோல்வியான அரசாங்கம் என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.
24 மணிநேரம் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க இந்த அரசாங்கம் தவறியது. இரண்டு வாரங்களில் இரண்டு முறை மின்சாரம் தடைப்பட்டது.
விவசாயிகளுக்கு பசளை மானியத்தை வழங்க அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது. தொழில் சார் நபர்களை அரசாங்கம் அவமதித்து வருகிறது. இவற்றின் மூலம் இந்த அரசாங்கம் பயந்த, தோல்வியான அரசாங்கம் என்பதை காணமுடிகிறது.
அது மாத்திரமல்ல, 8.0 வீதமாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பை இந்த அரசாங்கம் 4.3 வீதமாக கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்திருந்த இரண்டு பில்லியன் டொலர்களை ஒரு வருடத்திற்குள் வெளியில் எடுத்துச் செல்ல இந்த அரசாங்கம் வழிவகுத்துள்ளது.
இந்த அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு துணியை கொடுக்க முடியாது, பெற்றோரை கடைகளில் அலைய வைத்தது.
இது மட்டுமல்லாது, அரசாங்கம் ஜனநாயகம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகங்கள் அடக்கப்பட்டுள்ளன. இப்படியான தமது தோல்விகளை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் மக்களுக்கு அச்சமூட்டி வருகிறது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போரை வெற்றி கொண்டு, பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7.5 வீதத்திற்கும் மேல் அதிகரித்து, நாட்டு நிமிர செய்து வெற்றியடைந்த நாடாக மாற்றியிருந்தது.
அப்படியான நாட்டை தற்போதைய அரசாங்கம் தோல்வியான நாடாக மாற்றியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேவைகளை நிறைவேற்றும் நாடாக இலங்கை மாறியுள்ளது. தனது சிறப்புரிமைகளை அதிகரித்து கொண்டு அமைச்சர்களுக்கு இனிப்பு மருந்தை வழங்க பிரதமருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் அதிகரிக்கப்படுவதை கூட்டு எதிர்க்கட்சி தெளிவாக எதிர்க்கின்றது.
இந்த சகல விடயங்களின் அடிப்படையில் மக்களுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்காது, இதுவரை செய்தது போதும், கடவுளே என்று விலகிச் செல்லுங்கள் என்ற அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment