Header Ads



17 ஆம் திகதி போக்கூடாது


எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இன்றைய தினம்  -14- எழுத்து மூலம் அறிவிக்க உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய தரப்புக்களினால் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் பேரணிகளில் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், பேரணிகள், எதிர்ப்பு போராட்டங்கள் தவிர்ந்த ஏனைய தரப்புக்களின் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவிக்கும் வகையிலான எழுத்த மூலமான ஆவணமொன்று இன்றைய தினம் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யும் நோக்கில் சில தரப்பினர் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் கட்சியின் ஒழுக்க விதிகள் பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியானது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு கிடையாது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்ட எதிர்க்கட்சியின் கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று சுதந்திரக் கட்சி எழுத்து மூலம் அறிவிக்க உள்ளது.

No comments

Powered by Blogger.