17 ஆம் திகதி பேரணியில் மகிந்த பங்கேற்றால், கட்சியிலிருந்து நீக்கம் - சந்திரிக்காவும் ஆதரவு
கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஹைட்பார்க்கில் வரும் 17ஆம் நாள், பசில் ராஜபக்சவின் ஏற்பாட்டில், கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி நடைபெறவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பேரணிகளில் பங்கேற்பவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்தநிலையிலேயே, இந்தப் பேரணியில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றால், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்த மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திசாநாயக்காவுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கவும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகமான அரசியல்வாதிகளுக்கு மன நோய் முத்திவிட்டது.பொதுமக்களின் சொத்தை கலவடுத்து சாப்பிட்டு பழகி இப்போ இருக்க முடியவில்லை தண்ணீரில் இருந்த மீனை கரையில் கொண்டு போட்டால் எவ்வாறு மீண்டும் தண்ணீருக்குள் போக துடிக்கிறதோ அவ்வாறுதான் இந்த மகிந்தவும் அவர் கூட்டமும் துடிக்கிறார்கள்
ReplyDeleteShabash... Discriminated decision.
ReplyDelete