மே 16 ஆம் திகதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகளை இந்தியாவின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நசீம் சைதி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இதுதொடர்பாக அவர் தற்போது நடத்தி வரும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தமிழ்நாட்டில், வரும் மே 16ஆம் நாள் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், மே 16ஆம் நாள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது.
அசாமில் இரண்டு கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் ஆறு கட்டங்களாகவும் தேர்தல் நடக்கவுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் நாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment