Header Ads



தென்கொரியாவில் சிக்கன் உண்ணும் விருந்து - பிரான்ஸில் 15.000 முட்டைகளில் ஒம்லட்


தென்கொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான சிக்கன் உண்ணும் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்நாட்டின் இன்ஞ்சியான் நகரத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் 4,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சமைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள் அலங்கரிக்கப்பட்ட காரில் கொண்டு வரப்பட்டன. பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகளை திராட்சை ரசத்துடன் சேர்த்து உண்ட மக்கள் தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர். 

மைலோ பிரஃம் தி ஸ்டார் என்ற புகழ்பெற்ற கொரியன் நாடகத்தை நேரடியாக பார்த்து கொண்டு விருந்து உண்டது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதுபோன்ற கலாச்சார விழாக்களை தென்கொரிய அரசு தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

2

பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் ஈஸ்டர் தின நாளை முன்னிட்டு 15,000 முட்டைகளை பயன்படுத்தி ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கில் அமைந்துள்ள Bessieres என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த அபார சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் திங்கள் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடியதால், இதில் பங்கேற்ற கிராமத்தினருக்கு ராட்சத அளவில் ஆம்லெட் சமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் 15,000 முட்டைகள் வரவழைக்கப்பட்டன. 50 பேர் கொண்ட சமையல் குழுவினர் சுமார் 1.30 மணி நேரம் செலவிட்டு அனைத்து முட்டைகளையும் உடைத்தனர்.
இந்த ஆம்லெட்டின் சுற்றளவு சுமார் 4 மீற்றர்கள் ஆகும்.
பின்னர், வாத்து கொழுப்பு, உப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை சேர்த்து சுமார் 40 நிமிடங்கள் செலவிட்டு இந்த ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆம்லெட்டை சுவைக்க இதே கிராமத்தை சேர்ந்த 10,000 பொதுமக்கள் கலந்துக்கொண்டு அதனை உண்டு மகிழ்ந்தனர்.
இந்த கிராமத்தை பொறுத்தவரை கடந்த 1973ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஈஸ்டர் திருநாள் அன்றும் இவ்வாறு ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாரப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வீரரான நெப்போலியன் போனபர்ட் ஒருமுறை இந்த கிராமத்திற்கு அருகில் தங்கியிருந்ததாகவும், அவரது நினைவாகவும் இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ராட்சத ஆம்லெட் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருவதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.