தபாலில் அனுப்பப்பட்ட 14 கிலோ போதைப் பொருள்
போதைப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மத்திய தபால் நிலையத்தில் பரிமாற்றபப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பொதி வௌ்ளவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதியில் இருந்து 14 கிலோ கிராம் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அவரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைகக்ளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய தபால் நிலையத்தின் அதிகாரிகளிடமும் விசாரணை செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
Post a Comment