வைத்தியர்களின் கவனக்குறைவு - 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துன்பியல்நிகழ்வு
வலது காலில் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சையானது இடது காலில் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பேராதெனிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கண்டி பேராதெனிய வைத்தியசாலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வலது முழங்காலில் இடம்பெற்ற வருத்தமொன்றிற்காக 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 20 ஆம் திகதி பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவனுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் பிலிமத்தலாவ, விஜயதுங்க மாவத்தையைச் சேர்ந்த குறித்த சிறுவன் பேராதெனிய வைத்தியசாலையில் 16ஆம் இலக்க வாட்டிலேயே அனுமதிக்கப்படடிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதி கிடைக்காது?
ReplyDelete