ஞானசாரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மாலபே பகுதியிலுள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடேஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் குறித்த 13 பேரையும் விடுவித்து, கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என கூறி, அதனை இரத்துச் செய்து இவர்களை குற்றவாளிகள் என நிரூபித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரியே சட்ட மா அதிபரால் குறித்த மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த நீதவான்களான மாலதி குணரத்ன மற்றும் தேவிகா தென்னக்கோன் ஆகியோர், இதனை மார்ச் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.
Post a Comment