Header Ads



உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு - இலங்கைக்கு 117 ஆவது இடம்

ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்' உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது.

தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.

இதன் பட்டியல் வெளியிடப் பட்டது.

டென்மார்க் நாடு, உலகில் அதிகமான மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடாக தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாடு மகிழ்ச்சி யான நாடு பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு டென்மார்க் நாடு முத லிடத்தை  பிடித்துள்ளது. மூன்றாவது  இடத்தில் அயர்லாந்து உள்ளது.

நார்வே,  பின்லாந்து, கனடா,   நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாடுகள் டாப் 10 மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள் ளன. உலகின் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் டென் மார்க் தொடர்ந்து முதன்மை இடத்தில் இருந்து சாதனை படைத்து வருவது குறிப் பிடத்தக்கது.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் நாடுகளில்  தனி மனித நலனுக்கு அந்த நாடுகளின் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மக்களின் மிகுந்த மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணாக கூறப்படுகிறது.

இந்தியா கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 117-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 118-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள் ளது. சீனா 83-வது இடத்தில் உள்ளது.வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா இந்தப் பட்டியலில் 76வது இடத்தில் உள்ளது.

உலகின்  நம்பர்-ஒன் வல்லரசு நாடான  அமெ ரிக்கா மகிழ்ச்சி பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி 16-வது இடத் திலும், இங்கிலாந்து 23-வது இடத்திலும், ஜப்பான் 53-வது இடத்திலும், ரஷியா 56-வது இடத்திலும் இருக்கின்றன. பெரும்பாலான வல்லரசு நாடுகள் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன. தீவிரவாதிகளின் பிடி யிலும், பழமை வாதி களின் கையிலும் சிக்கியுள்ள நாடு களில் மகிழ்ச்சி என்பதே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கருத்து கணிப்பு நடந்த 156 நாடுகளில் 154-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. கடைசி இடமான 156-வது இடத்தில் சிரியா நாடு உள்ளது.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக மகிழ்ச்சி நாள் வரும் மார்ச் 20ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 157 நாடுகளை உள்ளடக்கிய இந்த தரவரிசையில், சிறிலங்கா 117ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு அடுத்து இந்தியா 118ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளை, தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் முன்னணியில் – 92ஆவது இடத்தில் உள்ளது. பங்களாதேஸ் 110ஆவது இடத்தில் இருக்கிறது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடாக டென்மார்க்கும் அதையடுத்து, சுவிற்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் வருமாறு – டென்மார்க், சுவிற்சர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, பின்லாந்து, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, சுவீடன்.

No comments

Powered by Blogger.