யூ.எல்.எம் பாரூக் மன்றத்தின் 11 வது வருடாந்த மகாநாடு
யூ.எல்.எம் பாரூக் மன்றத்தின் பதினோராவது வருடாந்த மகாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 3 மணிக்கு கொழும்பு 07 விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
சபாநாயகர் தேசபந்து கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் மாநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன் நகரதிட்டமிடல் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொள்வார்கள்.
இந்த வைபவத்தின் மூன்று கோரளை, மற்றும் பஹத புலத்கம தெபாலதே அஸ்கிரி பீட பிரதான சங்க நாயக்கர் வன்தய ஸ்ரீவழத்திராமதிபதி ஹால்யாலே ஆரியவங்ச தேரர் தேசிய ஐக்கியத்துக்கும் இன சௌஜன்யத்துக்கும் ஆற்றிய சேவைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிவினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக மன்றத்தின் தலைவரும் முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருமான யூ.எல்.எம் பாரூக் தெரிவித்தார்.
Post a Comment