Header Ads



டுபாயில் 11 கார்களை, 112 கோடிக்கு விற்பனைசெய்த இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு

துபாய் நாட்டில் முதலாளிக்கு சொந்தமான 11 கார்களை விற்பனை செய்த மூன்று இலங்கையர்களுக்கு எதிராக துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கசகஸ்தானை சேர்ந்த 43 வயதான முதலாளியும் அவரது பங்காளரும் வெளிநாடு சென்றிருந்த போது, அங்கு பணியாற்றிய இலங்கையை சேர்ந்த நபர்கள், போலி ஆவணங்களை தயார் செய்து 11 கார்களை விற்பனை செய்துள்ளனர்.

இரண்டு கோடியே 80 லட்சம் திர்ஹாம்களுக்கு (112 கோடி ரூபா) கார்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

மே 22 ஆம் திகதி முதலாளி நாடு திரும்பிய, அவரது கார் காட்சியகத்தை பார்வையிட்ட போது, அது வெறுமையாக இருந்ததுடன் அங்கு பணியாற்றிய இலங்கையர்களும் அங்கு இருக்கவில்லை என தெரியவருகிறது.

குறித்த சம்பவத்திற்கு முன்னர், இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டைகளை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் மே 22 ஆம் திகதியே அவர்கள் இலங்கை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

வழக்கை விசாரித்த துபாய் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

No comments

Powered by Blogger.