10 ஆயிரம் முயல்களை வேட்டையாடி, ஈஸ்டர் கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்
ஈஸ்டர் கொண்டாடப்படும் நிலையில் நியூசிலாந்து நாட்டு மக்கள் பத்தாயிரம் முயல்களை கொன்று விருந்து படைத்து ஈஸ்டரை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள ஒட்டாகோ மாவட்டத்தில் வயல்களில் விளையும் பயிர்களை நாசப்படுத்தும் முயல்களை அழித்து விவசாயத்தை காக்கும் வகையில் காட்டு முயல்களை கொன்று குவிக்கும் போட்டியை அலெக்ஸான்டிரா லயன்ஸ் கிளப் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
ஈஸ்டரின்போது கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த வேட்டை போட்டியில் உள்ளூர் மக்கள் பல குழுக்களாக பிரிந்துசென்று, முயல்களை துப்பாக்கிகளால் சுட்டு வேட்டையாடுவது வழக்கம். அதிகமான முயல்களை வேட்டையாடும் அணிக்கு பரிசும் உண்டு.
அவ்வகையில், 27 குழுக்களாக சுமார் 300 பேர் தலைகளில் டார்ச் லைட்களை கட்டியபடி நேற்றிரவு முயல் வேட்டைக்கு புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் மொத்தமாக சுமார் பத்தாயிரம் முயல்களை கொன்று குவித்தனர். 889 முயல்களை கொன்ற டவுன் சவுத் அணியினர் முதல் பரிசையும், 755 முயல்களை வீழ்த்திய ஹாப்பர் ஸ்டாப்பர்ஸ் அணியினர் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
கொன்ற முயல்களுடன் வீடுதிரும்பிய பலர் முயல் கறி விருந்து சமைத்து ஈஸ்டரை குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Ha ha if this done by muslims. .this will be headline news in world and our country medias as well bbs and humanitarian ngo.
ReplyDelete