O/L பரீட்சையில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் - முஸ்லிம்கள் எவருமில்லை
வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் 10 சிறப்பு முடிவுகளுக்குரிய மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்த விபரங்களின் அடிப்படையில் முதல் பத்து இடங்களில் தமிழ் மாணவர்கள் எவரும் உள்ளடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வெளியாகியுள்ள அப்பட்டியலில்படி,
முதலாம் இடம்- கொழும்பு விசாகா வித்தியாலத்தின் சத்சரணி ஹெட்டியாராச்சி, இரண்டாம் இடம்- கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தின் சமன் புன்சரா பெற்றுள்ளனர்.
இதேவேளை, மூன்றாம், நான்காம் முறையே தேவி பாலிகா வித்தியாலயத்தின் மெலீனா ரத்நாயக்க, கண்டி மகாமாயவின் இன்டீவரி ரத்நாயக்க, நான்காம் இடம்- நாலந்தா கல்லூரியின் ரயின்டு ஹேரத், ஐந்தாம் இடம்- ஆனந்தா கல்லூரியின் நெவில் வல்பிட்ட, ஆறாம் இடம்- கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஹிருஸா நெத்சரா,
ஏழாம் இடம்- பானந்துறை சுமங்கல வித்தியாலயத்தின் தருஸி அஞ்சலிக்கா, நீர்கொழும்பு மேரீஸ் ஸ்டெலா கல்லூயின் தினித் ஜெயக்கொடி, எட்டாம் இடம்- காலி சௌத்லேன்ட் கல்லூரியின் அமாயா நாணயக்கார, மாத்தறை ராஹூல வித்தியாலயத்தின் யஸாஸ்வின் வெல்லாப்புலி ஆகியோர் பெற்றுள்ளனர்.
இருப்பினும் மாவட்ட, மாகாண நிலையில் பெற்ற விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Don't worry , soon there will be an exam about who went for
ReplyDeleteUmra more than a dozen times ! We will lift the trophy !
And there are many more things we are unbeatable !