Header Ads



கணவரின் சடலத்துடன், 10 நாட்கள் வாழ்ந்த மனைவி - தெரிணியகலையில் சம்பவம்


கணவரின் உயிரிழப்பை ஏற்க முடியாமல் அவரின் சடலத்துடன் மனைவியொருவர் 10 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

குறித்த சம்பவம் தெரிணியகலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த தம்பதிகள் சுமார் 15 வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, கணவர் சுகவீனமுற்ற நிலையில் குறித்த பெண் தனது கணவனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பராமரித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார் என கூறப்படுகிறது.

இதேவேளை, கணவனின் பிரிவை ஏற்றுக்கொள்ள இயலாது, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் கணவரின் சடலத்துடன் 10 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

வழமை போல கணவருக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து பராமரித்துள்ளார்.

இந்த தம்பதிகள் வசிக்கும் இடத்திற்கு அருகில், அயலவர்  ஒருவர்  செல்லும் போது வீட்டில் இருந்து துர்மணம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகம் ஏற்பட வீட்டிற்குள் சென்று பார்வையிட்டுள்ளார்.

இறந்த நபரின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இறந்த நபர் சுகவீனமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.