Header Ads



100 குழந்தைகளைப் பெற ஆசைப்படும், மருத்துவர் ஜான் முகமது



-22-03-2016/Gulfnews-

பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் 100 குழந்தைகளைப் பெறுவதே தமது இலக்கு என்று சபதம் மேற்கொண்டுள்ளார். 

 பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவைச் சேர்ந்தவர் ஜான் முகமது (43). மருத்துவரான இவர், மூன்று மனைவிகள், 21 மகள்கள், 14 மகன்களுடன் ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

 கடந்த வாரத்தில்தான் இவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகள் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

 முடியுமானால், நான்காவது முறையாக திருமணம் செய்து 100 குழந்தைகளை பெறுவதே தனது இலக்கு என்று ஜான் முகமது சபதமெடுத்துள்ளார். மாதத்துக்கு ரூ. 1 லட்சம் சம்பாதிக்கும் இவர், தனது குடும்பப் பராமரிப்பு செலவுகளுக்கு இந்தத் தொகை போதுமானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 கல்வி இன்றி வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பும் அவர், தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு தரமான கல்வியை வழங்குவதே தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதே பெரும்பாடு என்று புலம்பும் பெற்றோர்களுக்கு ஜான் முகமது சிம்ம சொப்பனம்தான். 

 இவரைப்பற்றிய விடியோ முகநூலில் (பேஸ்புக்) வெளியானவுடன் அதனை 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த விடியோ 1.75 லட்சம் முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதுடன் 4,000-த்துக்கும் மேற்பட்ட "கமெண்டுகளை' அள்ளியுள்ளது.

 A 43-year-old doctor in Pakistan’s remote Baluchistan province, who has already fathered 35 children, is unfazed by the troubles of providing for his big family and is aiming to have 100 children.

Jan Mohammad, who lives with his three wives, 21 daughters and 14 sons in a poor locality of province’s capital city — Quetta, said he has never faced problems providing for his large family.

“Last week, my second and third wives gave birth to two daughters and I am now proud to be the father of 35 kids. If possible I would want to marry a fourth time and have 100 children,” he said.

Jan Mohammad said he requires around 100,000 Pakistan rupees (Dh3,508) a month to manage the expenses of his wives and children.

“I manage, as I am a qualified doctor and also run a small business,” he added.

Jan Mohammad is also keen to provide quality education to his children.

“There is no life without education nowadays and I want top education for my daughters and sons,” he said.

The family shot to fame after it was first seen on the Dawn News channel. The video was watched by over 3.3 million people on Facebook, who shared it over 175,000 times and commented on it over 4,000 times.



2 comments:

  1. May Allah give you 'Barakath' to rearing children with discipline.

    ReplyDelete
  2. அல்லாஹுவே போதுமானவன்

    ReplyDelete

Powered by Blogger.