Header Ads



மதுபான சாலைகளின் உரிமையாளர்களாக 100 எம்.பி.க்கள்


நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 100 பேர் மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களில் பலர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்ததுடன் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். 

மதுபான விற்பனை நிலையங்கள் இவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்களின் பெயர்களில் இயங்கி வருகின்றன. 

ஒரு மதுபான விற்பனை நிலையத்தின் மூலம் மாதம் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் மேல் இலாபம் கிடைத்து வருகிறது. 

குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அரசியல்வாதிகள் தலா 10 மதுபான விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றனர். 

களுத்துறையை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் மனைவி பெயரில் மூன்று மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. 

கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மூன்று அரசியல்வாதிகளுக்கு மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. களுத்துறையில் இரண்டு அரசியல்வாதிகள் மதுபான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் நான்கு பேர், கண்டி மாவட்டத்தில் இரண்டு பேர், காலி மாவட்டத்தில் மூன்று பேர், குருணாகல் மாவட்டத்தில் மூன்று பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் என அரசியல்வாதிகள் மதுபான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளனர். இதனை தவிர ஏனைய மாவட்டங்களிலும் அரசியல்வாதிகள் மதுபான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மதுபான விற்பனை நிலையங்களுக்கு மேலதிக சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு முழுவதும் பெட்ரோல் நிரப்பு நிலையங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

4 comments:

  1. Publish the name and the addresses please

    ReplyDelete
  2. மக்களாலே தெரிவு செய்யப்பட்டு மக்களாலே பிழைப்பும் நடத்துகிறார்கள். ஜனநாயகவாதிகளப்பா........

    ReplyDelete
  3. There must be a hospital like cancer hospital for alcoholics.
    General hospitals must be reserved only for non-alcoholic
    patients . Well, there's a saying in English " the people get
    leaders they deserve."

    ReplyDelete
  4. What a beautiful talented bar license holder in politicks wow

    ReplyDelete

Powered by Blogger.