Header Ads



10 பிக்குகளை கைது செய்தால், 100 பேர் விருப்­பத்தின் பேரில் சிறைக்குச் செல்வோம்


நாட்­டுக்­கா­கவும் பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல் கொடுக்கும் பௌத்த குரு­மார்கள் எதிர்­கா­லத்தில் 10பேர் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்­காக மேலும் 100 குரு­மார்கள் தமது விருப்­பத்தின் பேரில் சிறைக்குச் செல்லும் வேலைத் திட்­ட­மொன்று மாவட்ட ரீதியில் வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளது என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

ஹோமா­கம நீதி­மன்ற விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் இந்­நாட்டில் சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக இல்லை. நீதி­மன்­றுக்கு கல்­லெ­றிந்த அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் ஒரு­நாளில் பிணையில் விடப்­பட்டார்.

இதே­போன்று பாரிய குற்­றத்­துக்­குள்­ளான ஹிரு­னிக்கா ½ மணித்­தி­யா­ல­யத்தில் பிணையில் விடப்­பட்டார். ஆனால் நீதி­மன்­றுக்கு வெளியில் கலகம் விளை­வித்­த­தாக குரு­மார்கள் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். இதுதான் எமது நாட்டின் சட்டம்.

எமது நாட்டை ஆங்­கி­லேயர் ஆட்சி செய்­த­போது ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் பௌத்த குருமார் சிறை­வைக்­கப்­பட்­டனர். அதன் பின்பு இப்­போதே குருமார் சிறையில் வைக்­கப்­ப­டு­கி­றார்கள். இன்று இரா­ணுவ வீரர்கள் சிறைக்குள் தள்­ளப்­ப­டு­கி­றார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ. உறுப்­பி­னர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். பாதாள கோஷ்­டியை சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கி­றார்கள் குரு­மார்­களை சிறை­வைக்­கி­றார்கள்.

எதிர்­வரும் காலங்­களில் குரு­மார்கள் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக குரு­மார்கள் செயலில் இறங்­க­வுள்­ளார்கள். குரு­மார்கள் பிரி­வு­களை நோக்­காது அனை­வ­ரையும் ஒன்­றி­ணைக்கும் பணிகள் மாவட்ட ரீதியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

சமூ­கத்­துக்­கா­கவும் தேசிய நல­னுக்­கா­கவும் குரல்­கொ­டுக்கும் குரு­மார்கள் எதிர்­கா­லத்தில் 10 பேர் கைது செய்­யப்­பட்டால் விருப்­பத்­துடன் மேலும் 100 பேர் சிறைக்குச் செல்லும் திட்டம் வகுக்கப்படவுள்ளது.

சகல பிரிவுகளையும் சேர்ந்த குருமார்கள் கருத்து வேறுபாடுகளின்றி இத்திட்டத்தில் இணைந்து கொண்டு வருகிறார்கள் என்றார்.

-ARA.Fareel + விடிவெள்ளி

5 comments:

  1. Big mental to this priest. How can go to prison by themselves?

    ReplyDelete
  2. not like that.they will make problems in the street then will go to jail

    ReplyDelete
  3. Very good offer ! Buy one get ten free ! Don't miss out .

    ReplyDelete
  4. ஓசி சாப்பாடும், தங்க இடமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

    ReplyDelete
  5. அட மடையா குறு மார்கள் குறு மாதிரி இருந்தால் ok அவ்வாறில்லாமல் பயங்கரவாதியின் வேலைகளை செய்தால் உன்னையல்லாம் ஜெயிலில் போடாமல் அலறி மாளிகையில் வைத்து விருந்தா போடுவார்கள்.இலங்கையில் இன்று சில புத்த துறவிகளே பயங்கரவாதிகள் அவர்கள்தான் நாட்டை குழப்ப நிலைக்கு ஆக்குகின்றார்கள்.இப்போது தமிழ் பயங்கரவாதமோ முஸ்லிம் பயங்கர வாதமோ நாட்டில் இல்லை எல்லா மக்களும் நிம்மதியாக சமாதானமாக வாழவேண்டும் என்ற ஒரே கொள்கையில் இருக்கும் இவ்வேளையில் இந்த மஞ்சக்காட்டு பயங்கரவாதிகள்தான் நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.