"முஸ்லிம் சமூகத்தை, அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்" - YLS ஹமீட்
-அஹமட் இர்ஸாட்-
முஸ்லிம் சமூகத்தினை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.. வை.எல்.எஸ்.ஹமீட்
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐ நா மனித உரிமை ஆணையாளர் அல்- ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயத்தின் நோக்கம் யுத்தத்திற்கு பின்னரான மீழ் குடியேற்றம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் போன்றவை தொடர்பாக ஆராய்ந்து ஐ நா மணித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்பிப்பதாகும். சுருங்க கூறின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விடயங்களையும் அவர்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆராய்வதாகும்.
வடக்கில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 30 வருடங்களுகு முன் வெளியேற்றபட்டு அவர்களுடைய மீழ் குடியேற்றம் இன்னும் பாதிவழியில் நிற்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களின் மீழ் குடியேற்றம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட போதும் வட புல முஸ்லிம்களது நிலைமை இந்நாட்டில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் நோக்கப்படுகின்றது.
இதற்கு காரணம் என்ன? இம் மீழ் குடியேற்றத்தினை வைத்து அரசியல் செய்கின்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? என்பது ஒரு புதிராகவே இருப்பது ஒரு புறமிருக்க மனித உரிமை ஆணையாளர் ஹுசன் அவர்கள் இந்த நாட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்த போதும் பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களையோ அல்லது அவர்களது பிரதி நிதிகளையோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களையோ ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிப்பது யார்?
ஐ நா ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் இலங்கை வெளிவிவகார அமைச்சினால்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கையில் உள்ள ஐ நா அலுவலகம் உறுதிபடுத்தியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் வெளிவிவகார அமைச்சு வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்திருக்கின்றதா? அவ்வாவாறாயின் ஏன்?
அவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தெரியாதா? அல்லது இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல தேசிய தலைவர்கள் கூட இருகின்றார்கள் என்பதாவது புரியாதா?
வெளிவிவகார அமைச்சுக்கு இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இருப்பது தெரியாமல் இருக்காலாம். அல்லது முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் இருப்பதும் தெரியாமல் இருக்காலம். ஆனால் இத்தலைவர்களுக்கு இலங்கையில் ஒரு வெளிவிவகார அமைச்சு இருப்பது தெரியாதா? அல்லது வெளிநாட்டு பிரமுகர்கள் குறிப்பாக ஐநா பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற பொழுது அவர்களது நிகழ்ச்சி நிரலினை தயாரிப்பது வெளிவிவகார அமைச்சுத்தான் என்கின்ற நடைமுறையாது தெரியாதா? அல்லது ஆணையாளர் ஹுசைன் வரப்போகின்றார் என்ற விடயத்தையாவது முன்கூட்டியே அறிந்திருக்கவில்லையா ? ஏன் இவர்கள் உரிய காலத்தில் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு ஆணையாளர் முஸ்லிம் தரப்பினருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லை?
ஆனையாளரின் வருகைக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அவரை சந்த்திப்பதற்கான கோரிக்கையினை விடுத்ததாகவும் ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நிகழ்ச்சி நிரல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாட்டில் வாழுக்கின்ற மற்றுமொறு பிரதான சமூகம்தான் முஸ்லிம் சமூகமாகும். ஒரு சமூகத்தையே ஒதுக்கி விட்டு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தால் அதனை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் கூட சக்தியற்ற அல்லது பெறுமதியற்ற தலைவர்கள்தானா நமது முஸ்லிம் கட்சி தலைவர்களும் தேசிய தலைவர்களும். நாம் ஏன் சிந்திக்க கூடாது?
கடந்த கால அனுபவங்கள் இருந்திருந்தால ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக முஸ்லிம் தரப்பினரை சந்திப்பதற்கான நேர ஒழுங்கீட்டினை கோரியிருக்கலாம். அல்லது தயாரிகப்பட்ட நிகழ்ச்சி நிரலினை மாற்றி முஸ்லிம் தரப்பினருக்கு நேரம் வழங்குவதினை உறுதிப்படுத்தியிருக்கலாம்.
அவ்வாறு அவர்கள் மாற்ற உடன்படாமல் இருந்திருந்திருந்தால் அரச உயர் மட்டத்தில் அது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்து கொண்டு "அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்க தயங்க மாட்டோம் " என்று மட்டும் ஆவேச அறிக்கையினை விடுகின்ற அரசியல் தலைமைத்துவங்களைத்தான் முஸ்லிம் சமூதாயம் தமது எதிர்காலத்திற்காக நம்பியிருக்கின்றது.
சாதாரன சந்திப்பிற்கே நேரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமூதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தரும் என்று நம் சமூகம் இன்னு நம்புமானால் அன்று தந்தை செல்வநாயகம் " தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியதை போல் "இன்று முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறுவதை தவிர வேறு வழியில்லை.
YLS ஹமீத் : நீங்களும் அகில இலங்கை மக்கள் காங்கரசில் செயலாளராக இருந்த பொழுதும் கூட நவநீதம் பிள்ளை வந்தார்...
ReplyDeleteபங்கீ மூன் வந்தார்..உங்களால் அவர்களை சந்திக்க முடிந்ததா? ஆகக் குறைந்தது மக்களுக்காக மகஜர் ஒன்றையாவது சமர்ப்பிக்க முடிந்ததா?
அப்போதெல்லாம் சாப்பிட மாத்திரம் வாய் திறந்த நீங்கள் இப்போதுதான் பிறரின் மீது பழிசுமத்துவது உங்களின் சந்தர்ப்பவாத வங்குரோத்து அரசியலையே தோளுரித்துக் காட்டுகிறது.வடமாகாண முஸ்லிம்களின் 30 வருடகால இன்னல்களைச் சொல்லி நீங்கள் அரசியல் பிரபல்யம் தேடவேண்டாம்.
Rasmin, YLS ஹமீத் சொல்லாமல் வேறு யாரவது கூரியிருந்தால் அதற்கு உங்கள் பதில் என்ன?
ReplyDelete30 வருடமாக யாழ் முஸ்லிம்களின் இன்னல்களை கூறுவதட்கும் அதன் மூலம் அரசியல் செய்வதற்கும், அதன் மூலம் புலப்பு நடத்துவதற்கும் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் முடியுமா???
பாங்கீமூன் பற்றி அரசியல் அதிகாரம் அற்ற ஒரு செயலாளரிடம் கேட்பதை விட அதன் தலைவரிடம் கேட்பதுதான் சிறந்த்தது என நினைக்கிறோம். யார் சொல்கிறார் என்று பார்ப்பதை விட என்ன விடயம் சொல்லப்படுகிறது என்று பார்ப்பது தான் சிறந்தது என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.
YLS ஹமீத் அவர்கள், தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்த, அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தவர், அவரது அரசியல் பயணத்தில் நல்ல பங்களிப்பு செய்தவர், இலங்கை அரசியலில் நல்ல பரிட்சயம் ஆனா, அனுபவம் வாய்ந்த ஒருவர் என்பதையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறோம்.
Rasmin, YLS ஹமீத் சொல்லாமல் வேறு யாரவது கூரியிருந்தால் அதற்கு உங்கள் பதில் என்ன?
ReplyDelete30 வருடமாக யாழ் முஸ்லிம்களின் இன்னல்களை கூறுவதட்கும் அதன் மூலம் அரசியல் செய்வதற்கும், அதன் மூலம் புலப்பு நடத்துவதற்கும் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் முடியுமா???
பாங்கீமூன் பற்றி அரசியல் அதிகாரம் அற்ற ஒரு செயலாளரிடம் கேட்பதை விட அதன் தலைவரிடம் கேட்பதுதான் சிறந்த்தது என நினைக்கிறோம். யார் சொல்கிறார் என்று பார்ப்பதை விட என்ன விடயம் சொல்லப்படுகிறது என்று பார்ப்பது தான் சிறந்தது என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.
YLS ஹமீத் அவர்கள், தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்த, அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தவர், அவரது அரசியல் பயணத்தில் நல்ல பங்களிப்பு செய்தவர், இலங்கை அரசியலில் நல்ல பரிட்சயம் ஆனா, அனுபவம் வாய்ந்த ஒருவர் என்பதையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறோம்.
அதிமுக்கிய விடயாமான மனித உரிமை ஆணையாளர்களின் விஜயங்களின்போது நமது பெரிய முஸ்லிம் கட்சிகளினாலோ அல்லது தலைவர்களினாலோ ஒரு சத்திப்பை ஏற்படுத்தி ஒரு அறிக்கையினை கையளிக்க முடியவில்லை எல்லோரும் கவலைப்படும் நிலையில்,இங்கு ஒரு விடயத்தை நினைவு படுத்தியாக வேண்டும். அதாவது, நல்லாட்சிகான NFGG கட்சியினால் கடந்த இரண்டு தடவைகளிலும் மனித உரிமை ஆணையாளர்களினை சந்திக்க முடிந்திருக்கின்றது. அறிக்கைகளையும் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நவனீதம் பிள்ளை அவர்கள் தந்த காலகட்டம் மிகவுமே நெருக்கடியானது. ராஜபக்ஸவின் அராஜகத்திற்கு முன்னால் எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் வாய்திறக்க பயப்பட்ட காலமது. அந்த நேரத்திலும் NFGG மிகத்துணிச்சலாக நவனீதம் பிள்ளையை சந்தித்து முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் பற்றி அறிக்கை கொடுத்திருந்தார்கள். இதனைப்பாராட்டியாக வேண்டும். இப்படியான கட்சிகள்தான் நமக்கு தேவைப்படுகின்றன.
ReplyDeleteபுதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு இப்பவே அத்திவாரம் போடுகின்றார் mr Hameed
ReplyDeleteWho else will protect the Muslim Community? Risard and Rauf Hakeem????
ReplyDeleteIt appears that Jaffna Muslims had realized that Sri Lankan Muslim leaders are not worth a penny and they had taken the matters in their own hands. They intercepted the UN envoy who was on his way to Nallur Temple and handed over their petition.
ReplyDeleteIt is a very good start. Muslims from rest of the country should learn lessons from this and take leadership on their own hands instead of depending on these so called worthless Leaders.
இப்படியா தலைப்பையும் முடிவையும் கூறுவது? முஸ்லிம் தலைமைகள் தரமாக இருந்தால் மட்டும், இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைமை அவர்களைக்கொண்டு மாறிவிடுமா?. எந்தவொரு நிலைமையையும் அல்லாஹ்தான் உண்டுபண்ணுகிறான். தலைமைகள் மட்டுமல்ல முஸ்லிம் அதிகாரிகளும் மாறவேண்டும்.
ReplyDeleteNalla kaalvi kaeetteer.yls sir pls answer this comments???
ReplyDeleteYLS Hameed அவர்கள் தற்போது கூறியுள்ள விடயம் மிக முக்கியமான விடயம். அதையிட்டு ஆக்கபூர்வமாக சிந்தித்து கருத்துக்கூறுவதையும் செயற்படுவதையும் விட்டு விட்டு அங்கே.. இங்கே.. என்று பிற்போக்குத்தனமாக கருத்துக்கூற வேண்டாம்.
ReplyDeleteநமது மந்திரிமார் மீடியாமுன் வீராப்புபேசவும் வம்புக்கு இழுப்பவனுடன் வாய்ச்சண்டை பிடிக்கவும் முண்டியடித்துக்கொள்வார்கள் எது முக்கியமோ அதில் கோட்டை விட்டுவிட்டு அடுத்த பஸ்வரும்வரை கூக்குரல் இடுவார்கள்...
ReplyDeleteஒரு சமூகத்தின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்து வயிறு வளக்கும் தலைவர்கள் அச்சமூகத்தின் கஸ்டங்களை இலகுவில் முடிவுக்கு கொண்டு வந்து சுபீட்சத்தை அம் மக்களுக்கு வழங்கமாட்டார்கள்(இது வரலாறு).அப்படி செய்தால் மஹிந்தைக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ReplyDeleteஇப்படித்தான் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எல்லாவற்றிலும் சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்கள். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ReplyDeleteYLS will be joining in SLMC very soon.mayor candidate for kalmunai
ReplyDelete