வெள்ளை மாளிகையிலும் Wi Fi பிரச்சினை - தனது மகள்கள் எரிச்சலடைவதாக, ஒபாமா குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை ஃபை இணைப்பு பிரச்சினைகள் உள்ளன என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆங்காங்கே வை ஃபை இணைப்பு கிடைக்காமல் இருப்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு பிரச்சினை என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் இணைப்பு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை ஃபை வேலை செய்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையால் தனது மகள்கள் எரிச்சலைந்துள்ளனர் என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறினார்.
எனினும் அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், வை ஃபை பிரச்சினையை தீர்க்க தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அடுத்த அதிபர் இதிலிருந்து விடுபட தான் முனைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

This is the problem for them and worrying to solve ... BUT What is in syria is not an issue ... that is why they keep dating for meetings
ReplyDelete