இரவில் சிறிகொத்தா சென்று UNP யின் அரசாங்கத்தை ஏற்படுத்த, யோசனைகூறிய மைத்திரி எதிர்ப்பாளர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியை தூக்கி நிறுத்துவதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் உரையாற்றுகையில்,
“நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தூக்கிய நிறுத்த சென்றவர்கள் என்று கூறுவதற்று சிலர் முயற்சிக்கினறனர்.
நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தூக்கி பிடிக்க போவதில்லை. எம்மை அவதூறு செய்பவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அந்த கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க உதவுக்கூடியவர்கள்.
எம்மை விமர்சிக்கும் நபர்கள் இரவு நேரத்தில் சிறிகொத்தவிற்கு சென்று “தேசிய அரசாங்கம் தேவையில்லை, தற்போதுள்ள அமைச்சரவையை கலைத்து விட்டு, இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவோம்” என்று யோசனை கூறியதோடு அமைச்சு பதவிகளையும் கோருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிப்பவர்கள் எனக் கூறும் இவர்கள், கட்சியை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை பற்றி அல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றியே பேச வேண்டும்” எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment