Header Ads



மைத்திரியை பிரத்தியேகமாக சந்தித்த UNP அமைச்சர்கள்,

கடந்தவார அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் ஜனாதிபதி சிறிசேனவை  பிரதமர் விக்கிரமசிங்கா தலைமையில் ஐதேக அமைச்சர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்ததுதான். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு ஜனாதிபதி தெரிவித்தது இங்கு கலந்துரையாடப்படுவது யாவும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடங்கிவிடவேண்டும் மற்றும் இங்கு சமூகமளிக்காதவர்களின் காதுகளுக்குள் செல்லக் கூடாது என்று.

பிரதமர் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தது,  மீண்டும் ஒரு முறை இன வன்முறையை பரப்பி நல்லிணக்கத்தை குழப்புவதற்கான ஒரு இயக்கம் ஆரம்பமாகியுள்ளது மற்றும் ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் ஒரு தொலைக்காட்சி சேவை என்பன இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று. அவர் மேலும் தெரிவித்தது இதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜனாதிபதி சிறிசேனவும் அதற்குச் சம்மதித்தார்.  முரண்பாடாக இந்தக் கூட்டம் முடிந்து 24 மணித்தியாலம் நிறைவடைவதற்கு முன்னரே பிரதமர் விக்கிரமசிங்கா, வெறுப்பை பரப்பி இன நல்லிணக்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுவதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் பெயர்களைக் கூட வெளியிட்டு அந்த ஊடகத்தை பாரளுமன்றத்தில் வெளியிடும் பணியினை மேற்கொண்டார்.

 மேலும் ஜனாதிபதி சிறிசேன, ஐதேக அமைச்சர்களிடம் எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டங்களுக்கான அபிவிருத்தி திட்ட வேலைகளை செயல்படுத்த ஒற்றமையாக வேலை செய்யுமாறு ஆலோசனை தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் மற்றும்; இணைத் தலைவர் ஆகியோர் ஒருமித்து பணியாற்ற வேண்டும் என அவர் சொன்னார்.

No comments

Powered by Blogger.