வீதிக்கு வருகிறது UNP, 15 ஆம் திகதி பாரிய போராட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.
மக்களின் ஆணைக்கு எதிராக குரல் கொடுப்போர், எதிர்ப்பை வெளியிடுவோர் மற்றும் நல்லாட்சியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அண்மையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை பார்வையிடச் சென்ற போது இந்த போராட்டம் குறித்து பிரதமர் தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பதிலடியாக இந்தப் போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment