Header Ads



சுதந்திரக் கட்சியையோ, தலைமைத்துவத்தையோ விமர்சித்தால் நடவடிக்கை - SLFP செயற்குழு தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது அதன் தலைமைத்துவத்தையோ எவரேனும் விமர்சித்தால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சியின் ஒழுக்காற்றுக்குழு முன்னெடுக்கும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கையிலிருந்து விடுபடுவதற்கு விளக்கம் கோரப்பட்டிருந்த 10 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளில் ஒருவர் மாத்திரம் தமது தரப்பு நியாயத்தை அறிவித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

ஏனைய 9 பேருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. மனம்திருந்திய பாம்பு கொத்தாது போனாலும் சீறிக்கொள்ளவாவது வேண்டும். இல்லையென்றால் அதனிடம் பயமில்லாது போய்விடும் என்ற கதைபோலத்தான் இதுவும்!

    ReplyDelete

Powered by Blogger.