IS பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் ஈராக் இராணுவம், அமெரிக்கப்படைகளும் துவம்சம் செய்ய தயார்
ஈராக் நாட்டின் மிகப்பெரிய மாகாணமான அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். குழவின் பிடியில் இருந்த ரமடி நகரின் கிழக்குப்பகுதியை ஈராக் இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் அந்த நகர் முழுவதும் அரசு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
ருமடி நகர் மீது கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உள்நாட்டு சுன்னி பழங்குடியின மக்களின் உதவியுடன் ஈராக் இராணுவம் ஐ.எஸ். குழுவுடன் உச்சகட்ட மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு ரமடியில் உள்ள சஜாரியா மற்றும் ஜுவைபா மாவட்டங்களை கைப்பற்றிய ஈராக் படைகள் அருகாமையில் உள்ள ஹுஸைபா அல்-ஷ்ர்க்கியா மாவட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.எஸ். குழு ஓடஓட அடித்து, விரட்டி இராணுவப் படைகள் முன்னேறி வருவதாகவும் தலைநகர் பாக்தாதை ரமடியுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதால் ரமடி நகரின் அருகேயுள்ள ஹபானியா பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டுப் படைகள் இனி ரமடி வழியாக உள்ளே நுழைந்து ஐ.எஸ். குழுவை துவம்சம் செய்யும் என போர்க்கலை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment