IS பயங்கரவாதிகள் 40 பேருக்கு, மரணதண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்
ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 40 பேருக்கு மரண தண்டனை விதித்து, ஈராக் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈராக்கில், அரசை எதிர்த்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கின் முக்கிய நகரமான திக்ரித்தை, இரு ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றினர். அப்போது, ஈராக் ராணுவ வீரர்கள், 1,700க்கும் அதிகமானோரை சுட்டுக் கொன்றனர். ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதை தங்களின் இணையதளத்திலும், 'வீடியோ'வாக வெளியிட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலையில், திக்ரித் நகரை, ஈராக் ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. அப்போது, ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக, 600க்கும் அதிகமான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 40 பேருக்கு ஈராக் கோர்ட், நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Post a Comment