ஐபோனிற்கு சவாலாக, சாம்சுங் Galaxy A9 வருகிறது
ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள போதிலும் சாம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கிடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது.
இந்நிலையில் அப்பிளின் ஐபோனிற்கு சவால் விடும் வகையில் Galaxy A9 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதேவேளை Window 10 மொபைல் இயங்குதளத்துடன் கூடியதாகவும் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
So far nothing can beat iPhone. Samsung as usual no matter how advance their hardware is, the android os sucks big time.
ReplyDelete