தம்மாலோக்க தேரரை கைதுசெய்ய, ஜனாதிபதியின் அனுமதிக்காக காத்திருக்கும் CID
உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பும் வரையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாக உடுவே தம்மாலோக்க தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு சட்ட மா அதிபர் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பௌத்த பிக்குகளில் ஒருவரான தம்மாலோக்க தேரர் கருதப்படுகின்றார்.
தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்டால் பதற்ற நிலைமை ஏற்படக் கூடும் எனவும், ஜனாதிபதி நாட்டில் இருக்கும் போது கைது செய்வது உசிதமானது எனவும் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
தம்மாலோக்க தேரர் கைது செய்வது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் அனுமதி கோரப்பட்ட போதிலும் தற்போதே அதற்காக அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சட்ட மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment