உடுவே தம்மாலோக்க தேரரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த CID க்கு பணிப்புரை
யானைக்குட்டி ஒன்றை அனுமதிப்பத்திரம் இல்லாமல் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் உடுவே தம்மாலோக்க தேரரை சந்தேகநபராக கருதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சீ.ஐ.டி.க்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தம்மாலோக்க தேரர் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தேரர் தம்வசம் வைத்திருந்த யானைக்குட்டியின் பெறுமதி 5.9 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யானைக்குட்டி கடந்த ஜனவரி 28ஆம் திகதியன்று பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையின் உட்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment