இரகசிய கலந்துரையாடல்கள், பசில் மூலமாக மகிந்தவிற்குச் செல்வது எப்படி - விசாரணைக்கு மைத்திரி உத்தரவு
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவின் வீட்டில் சுதந்திரக் கட்சி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் அவர் நடத்திய ஒரு கூட்டத்தின் ஒலிப்பதிவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் வழங்கிய பரபரப்புச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
எனினும் அந்த பதிவு செய்யப்பட்ட இறுவெட்டில் எஸ்.பி.திசாநாயக்காவின் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நடைபெற்றவை மட்டுமன்றி, ஜனாதிபதி சிறிசேன சுதந்திரக் கட்சி குழுவினருடன் நடத்திய கூட்டத்தைப் பற்றிய பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.
பசில் அந்த இறுவெட்டை மகிந்தவிடம் கையளித்ததுடன் அதன் உள்ளடக்கங்களைப் பற்றியும் அவரிடம் விளக்கியுள்ளார்.
தனது கலந்தரையாடல்கள் வெளியில் கசிந்து விட்டது என்பதை ஜனாதிபதி சிறிசேனவும்கூட அறிந்து கொண்டார்.
அவர் அமைதியாக இந்த விடயம் பற்றிய ஒரு விசாரணையையும் முடுக்கிவிட்டார் மற்றும் தனது முகாமில் உள்ள புரூட்டஸை அடையாளம் காண்பதற்கு வேண்டிய போதிய ஆதாரங்கள் இப்போது அவரிடம் உள்ளதாகத் தெரிகிறது.
கம்பகா மாவட்டத்தை சேர்ந்த இந்த அமைச்சர்தான் புரூட்டஸ் ஆக மாறியுள்ளார், மைத்திரியின் நல்லவர்களுக்கான பட்டியலில் மட்டும் இவர் இடம் பிடித்துவிடவில்லை, ஆனால் இவர் தன்னை ஒரு விசுவாசியாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவிடத்திலும் அதேபோல அவரது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவிடத்திலும் காட்டியுள்ளார்.
குள்ள நரி தந்திரம் எனும் பெயர் இவர்களுக்காகவே வந்தது..
ReplyDelete